Friday 3rd of May 2024 02:54:05 AM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
தமிழ்நாட்டு மீனவர்கள் ஜூன் 1ம் திகதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டு மீனவர்கள் ஜூன் 1ம் திகதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!


தமிழ்நாட்டு மீனவர்கள் வரும் ஜூன் 1ம் திகதி முதல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவியதாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல அனுமதி மறுக்கட்டிருந்தது.

தற்போது மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் இருப்பதால் அது முடிவடைய காலதாமதம் ஆகும் என்பதால் 61 நாட்கள் என்பதை 47 நாட்களாக குறிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மற்றும் தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட மீனவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய மீன்வள அமைச்சகம், கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்க கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் திகதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஓகஸ்ட் 1ம் திகதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கும் அவர்களை சார்ந்த மீனவர் சமூதாயத்திற்கும் இவ் அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE